// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

திருச்சி ஃபிளாட்டலிக் கிளப் சார்பில் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சி ஃபிளாட்டலிக் கிளப் செயலர் விஜயகுமார் வரவேற்றார். நிறுவனர் நாசர் தலைமை வகித்தார். பொருளாளர் தாமோதரன், அன்பழக பாண்டியன், பிரேம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 

அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார் செட்டெனன்ட் அஞ்சல் தலை குறித்து பேசுகையில்...அஞ்சல் தலையில் பொது பயன்பாட்டு அஞ்சல் தலை, நினைவார்த்த அஞ்சல் தலை, குறுவடிவ அஞ்சல் தலை (மினியேச்சர்), ஷீட்லெட் அஞ்சல் தலை, செட்டெனன்ட் என அஞ்சல் தலை பல்வேறு விதமாக உள்ளது.



வடிவமைப்பு, நிறம், மதிப்பு அல்லது அச்சில் வேறுபடும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இணைக்கப்பட்ட தபால் தலைகளைக் குறிக்கிறது, பெரும்பாலும்  தொகுதியாக விற்கப்படுகிறது. தபால் தலை சேகரிப்பில் இந்த இணைக்கப்பட்ட, மாறுபட்ட அஞ்சல் தலைகள் பிரிக்கப்படுவதற்குப் பதிலாக ஒன்றாக சேகரிக்கப்படுகின்றன, அதாவது நான்கு தொகுதிகள் தொடர்ச்சியான படத்தை உருவாக்குவது போன்றவை. 


ஒரே தாளில் இருந்து அஞ்சல் தலைகள், ஒன்றாக அச்சிடப்பட்ட ஆனால் வெவ்வேறு பண்புகளைக் கொண்டவை என்றார். அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் ஜலால், குத்புதீன், விப்ரா ஸ்ரீ உட்பட பலர் நிகழ்வில் பங்கேற்றனர். நிறைவாக இளம்வழுதி நன்றி கூறினார்.

Post a Comment

0 Comments