// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** திருச்சியில் தூய்மை நலப்பணியாளர்களுடன் பெருநாளை கொண்டாடிய மஜகவினர் .! சுட சுட பிரியாணி வழங்கி வாழ்த்துக்களை பரிமாறினர் .!!

திருச்சியில் தூய்மை நலப்பணியாளர்களுடன் பெருநாளை கொண்டாடிய மஜகவினர் .! சுட சுட பிரியாணி வழங்கி வாழ்த்துக்களை பரிமாறினர் .!!

மனிதநேய ஜனநாயக கட்சி திருச்சி மாவட்டம் சார்பில் தலைவர் மு‌.தமிமுன் அன்சாரி அவர்களுடைய அறிவுறுத்தலில் பேரில் ரம்ஜான் பண்டிகை சமூக நல்லிணக்கத்தை பேணும் வகையில் பல்வேறு நிகழ்வுகளாக தமிழகம் முழுவதும் மஜக வினர் கொண்டாடி வருகின்றனர். 

அதன் ஒரு நிகழ்வாக திருச்சியில் தூய்மை நலப் பணியாளர்களுக்கு சுட சுட பிரியாணி வழங்கி பெருநாள் (ரம்ஜான்) வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது.

இந்நிகழ்வில் மாநில இளைஞர் அணி செயலாளர் திருச்சி ஷரிப், மாவட்ட பொருளாளர் ஜமீர் பாஷா, மாவட்ட துணைச் செயலாளர் யாசர் ஷெரிப், இளைஞர் அணி செயலாளர் சதாம், மாவட்ட அணி நிர்வாகிகள் நியாஸ், ஷேக் உசேன் மற்றும் ஜாகீர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.



Post a Comment

0 Comments