பாரத் பிளாட் புரமோட்டர்ஸ் சார்பில் திருச்சி திருவெறும்பூர் காட்டூர் பாலாஜி நகர் பிரதான சாலையில் பாரத் ஸ்பிரிங்ஸ் என்ற பெயரில் புதிய அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் விற்பனை தொடக்க விழா நடை பெற்றது விழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு துவக்கி வைத்தார் .
பாரத் பிளாட் புரமோட்டர்ஸ் மற்றும் அக்குழமத்தின் நிர்வாக பங்குதாரர் நூர்முகமது வரவேற்று பேசுகையில்: இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயத்தை தொடர்ந்து கட்டுமானத் துறை முக்கிய பங்கு வகிக்கிறது.கடந்த 39 ஆண்டுகளாக இத்துறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட அடுக்கு மாடி வீடுகளை கட்டியுள்ளோம்.
தற்போது திருச்சி காட்டூர் பாலாஜி நகரில் கட்டப்பட உள்ள பாரத் ஸ்பிரிங்ஸ் 3 பிளாக்குகளில் 160 வீடுகள் 1 பிளாக்கில் கிளப் ஹவுஸ் கொண்ட பிரமாண்ட அடுக்கு மாடி குடியிருப்பாகும். 2 மற்றும் 3 படுக்கை அறை வசதி கொண்டது.
இதில் வீடு வாங்குவோருக்கு பல்வேறு அறிமுக விழா சலுகைகளை வழங்குகிறோம். இதன்படி இன்று (நேற்று ) முதல் பாரத் ஸ்பிரிங்ஸ் அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு முன்பதிவு செய்பவர்களுக்கு மாடுலர் கிச்சனுக்கு ரூ.1 லட்சம், கார் பார்க்கிங்கிற்கு ரூ1.5 லட்சம் மற்றும் வீட்டின் மதிப்பில் 1 லட்சம் ஆகிய தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகிறது. இக்குடியிருப்பில் நடை பயிற்சிக்கு தனி பாதை, பாதுகாப்பான கார் நிறுத்துமிடம், கண்காணிப்பு கேமரா, ஏசி உடற்பயிற்சி கூடம், நீச்சல் குளம், உள் விளையாட்டு அரங்கம், பேட்மிண்டன் கோர்ட், நிகழச்சிகள் நடத்துவதற்கான அரங்கம், நூலகம், எலக்ட்ரானிக் இரண்டு சக்கர வாகன சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளது. அனைத்து தேவைகளுக்கும் உள்ளடக்கிய இப்பகுதியின் அருகில் புகழ் பெற்ற பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழிற்சாலைகள்போன்றவற்றை உள்ளது கூடுதல் சிறப்பாகும்.





0 Comments