// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** சென்னை மெரினா கடற்கரையில் உலக தண்ணீர் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்து மக்கும் வகையிலான பைகளை பயன்படுத்தி கடல்நீர் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு

சென்னை மெரினா கடற்கரையில் உலக தண்ணீர் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்து மக்கும் வகையிலான பைகளை பயன்படுத்தி கடல்நீர் கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு

சென்னை மெரினா கடற்கரையில்   உலக தண்ணீர் தினத்தில் மாற்றம் அமைப்பின் சார்பில் நெகிழி பயன்படுத்துவதை தவிர்த்து மக்கும் வகையிலான  பைகளை பயன்படுத்தி கடல் நீரை சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக பொதுமக்களுக்கு மக்கும் வகையிலான பைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

உலகின் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் தண்ணீர் மிக முக்கியம் பூமி பந்து நிலபரப்பை விட அதிகம் கடல் நீரால் சூழ்ந்துள்ளது.


உலகம் முழுவதும் உள்ள கடல்நீரில் பல கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றனர் நாகரிகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியடைந்துள்ள நிலையில் கடல் பயணம் மற்றும் கடற்கரை பகுதிகளில் பொழுது போக்கு மற்றும் சுற்றுலா பயணங்கள் மேற்கொள்ளும்மனிதர்கள் கடற்கரை பகுதியில்  நெகிழி பைகள் நெகிழி பாட்டில்களை மற்றும் பல நெகிழி பொருட்களை பயன்படுத்தி கடல் நீரிலும் கடற்கரையிலும் வீசி செல்லுங்கின்றனர் இதனால் அந்த நெகிழி பொருட்கள் மக்காமல் கடல் நீர் கடற்கரை பகுதிகள் மாசடைவதுடன் கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கின்றனர்.


இதனை தவிர்க்கும் விதத்திலும் பொதுமக்களுக்கு சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும் சென்னை மெரினா கடற்கரையில் மாற்றம் அமைப்பினர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இது குறித்து எடுத்து கூறி நெகிழி பைகளை பெற்று கொண்டு மக்கும் வகையிலான பைகளை வழங்கி விழிப்புணர்வு செய்தனர்.


 இந்த நிகழ்வில் மாற்றம் அமைப்பின் நிறுவனர் தலைவரும் தேசிய மாநில விருதுகளை வென்ற நடிகரும் இயக்குனருமான ஆர்.ஏ.தாமஸ் வழக்கறிஞர் கலைசெல்வன் வழக்கறிஞர் ஜான் பேராசிரியர் பிரிட்டோ மாணவர்கள் லோகேஷ் கிருஷ்ணா முகமது ஷபி மணிகண்டன் அலெக்ஸ் பாண்டியன் நிகோலஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்தனர்

Post a Comment

0 Comments