நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில பொது செயலாளராக ஜெபி (எ) ஜெயராம் பாண்டியன் உள்ளார். அஞ்சாநெஞ்சனாக வலம் வரும் இவரது துணிச்சலை கண்டு மக்கள் வியந்து போய் நிற்கின்றனர். மக்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனடியாக களத்தில் இறங்கி எதிரே இருப்பவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவர்களுடன் தன்னந்தனியே நேருக்கு நேர் நின்று கேள்விகளை எழுப்பி மக்களுக்காக போராடுபவர் இந்திய ஜெபி.
எந்த ஒரு பிரச்சினையையும் ஆதாரத்துடன் வெளியிட்டு வருகிறார். ஏழை, எளிய மக்களுக்கு அடிக்கடி உதவிக்கரம் நீட்டி வருகிறார். பாஜகவை சேர்ந்த அண்ணாமலை எப்படி செயல்படுகிறாரோ அதே போல இவரும் செயல்படுவதால், மக்கள் இவரை குட்டி அண்ணாமலை என்றே அழைக்கின்றனர். நிர்வாகிகளுக்கு ஒரு பிரச்சினை என்றால் உடனே களப்பணி செய்கிறார். இவரது நேதாஜி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தில் பயணிப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தென் மற்றும் வட தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினர் இருந்தாலும், இவருக்கென்று ஒரு மரியாதை உண்டு. 2026 சட்டமன்ற தேர்தலில் ஜெபி களம் காண்பார் என மக்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும் என்றும், அவர்களுக்கு பின்னால் இருந்து செயல்படுவோம் என்றும், மறைமுகமாக 234 தொகுதிகளிலும் உள்ள சுயேட்சை இளைஞர் வேட்பாளர்களுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிறார் ஜெபி.
.
ஜெபியின் வேகமும், விவேகமும் தங்களை சரியான பாதையில் கொண்டு செல்வதாகவும், இனிவரும் காலங்களில் ஜெபி கூறும் நபரே முதலமைச்சராவார் எனவும் இயக்கத்தில் பயணிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Comments