// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** கலை,இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா

கலை,இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா

இலக்கிய வாசல் அமைப்பு சார்பில் கலை,இலக்கியத் துறையினருக்கு விருது வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.

இலக்கியவாசல் நிறுவனத் தலைவர் கப்பல் கவிஞர் கி.கிருஷ்ணமூர்த்தி நோக்க உரையாற்றினார். கலை அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வ. நாராயண நம்பி தலைமை வகித்தார். குளித்தலை தமிழ் பேரவை தலைவர் முனைவர் கடவூர் மணிமாறன், தென்னிந்திய நடிகர் சங்க நியமன செயற்குழு உறுப்பினர் வேர்கள் அறக்கட்டளை நிறுவனர் சூ.அடைக்கல ராஜா ,முனைவர் க.திலகவதி உள்ளிட்டோரால் இலக்கியத் தொண்டறச் செம்மல் விருது கவிஞர் க.மாரிமுத்து',  "இலக்கியத் தொண்டறச் செம்மல் விருது" கவிஞர் க.மல்லிகா,மூன்றாம் தமிழ் மாமணி விருது கார். வேலழகன், சிறந்த படைப்பாளர் விருது முனைவர் செ.அருணாசலம்,

இலக்கிய ஆர்வலர் விருது, எம்.ஆர்.எஸ்.கேசவன்,  அ.வைகுண்டமூர்த்தி  உள்ளிட்டோர்க்கு வழங்கினர்.

திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றத் தலைவர் தமிழ்ச்செம்மல் வீ.கோவிந்தசாமி, திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழரங்கு பொறுப்பாளர் தமிழ்ச் செம்மல் இராச. இளங்கோவன் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் துணைத் தலைவர் முனைவர் பி.கலைமணி உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.


பேராசிரியர் பீட்டர் நடேசன்,

ஒ.கார்முகில். பைந்தமிழ் இயக்கம் தலைவர் பழ.தமிழாளன், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் பெ.விஜயகுமார்,  மாநில கத்தோலிக்க சங்கம் ஒருங்கிணைப்பாளர் T.ஜேக்கப், நாடக ஆசிரியர் வெ.இராஜகோபால், நாடக நடிகர்  ந.கண்ணன்,   சுங்கத்துறை மேனாள் கண்காணிப்பாளர் விஜயராகவன், பொன்மலை ரயில்வே ஓய்வு துறை, சிறைத்துறை மேலாளர் அதிகாரி தியாகராஜன், சேகரன், தன்னிறை அமைப்பு நீலமகம், நாடக இயக்குனர் ஆதி ஸ்ரீதர், சிறார் கதை சொல்லி கார்த்திகா கவின் குமார், இலக்கியவாசல் பொருளாளர் விடியல் வினோத் ,கிருஷ்ணய்யா, வின்சென்ட், தொழிலதிபர் சுப்பிரமணியம், சம்பத், மூர்த்தி கணேசன், ஆனந்தன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

முன்னதாக பன்முக கலைஞர் லால்குடி முருகானந்தம் வரவேற்க, நிறைவாக மலைக்கோட்டை நற்பணி இயக்க தலைவர் உறந்தை மு.பிச்சையா நன்றிக் கூறினார்

Post a Comment

0 Comments