தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராஜசேகரன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அந்தவகையில் கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சிந்தாமணி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
முன்னதாக அப்பகுதியில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து சிந்தாமணி பகுதியில் ஒவ்வொரு வீதியாக நடந்து சென்று பொது மக்களை சந்தித்து, தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
பிரச்சாரத்தின் போது அப்பகுதி மக்கள் வேட்பாளர் ராஜசேகரனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.






0 Comments