திருச்சி பால்பண்ணை அருகே உள்ள தேநீர் கடை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க பெண் நபர் மயங்கிய நிலையில் கிடந்தார். மயங்கிய நபர் உயிர் காக்க 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள நோயாளியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
தகவல் அறிந்த திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் சம்பவம் இடம் சென்று விசாரிக்கையில், மேற்படி நபர் கடந்த ஒரு ஆண்டுகளாக யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளதாகவும் அவருக்கு உறவினர்கள் என்ற முறையில் யாரும் இல்லை என்பதும்,சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சரி வர சாப்பிடாமல் மயங்கி கீழே விழுந்ததாகவும் தெரிய வந்தது. அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இறந்து போன நபரின் இறப்பில் எவ்வித சந்தேகமும் இல்லை என்ற நிலையில் இறந்த பெண் உடலை யாரும் உரிமை கோர வில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்துவரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர், அண்ணா நகர், குழுமிக் கரை மயானத்தில் திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார் முன்னிலையில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதத்திற்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

0 Comments