// NEWS UPDATE *** பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது தொடர்பான வழக்கை முடித்துவைத்தது செல்லும் - ராம்குமாரின் தந்தை பரமசிவம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு *** பெயர், விலாசம் தெரியாத முதியவர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

பெயர், விலாசம் தெரியாத முதியவர் மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

 திருச்சி கண்டோன்மென்ட் ஹீபர் ரோடு திருச்சி மாவட்டத்தின் தீயணைப்பு துறை அலுவலகம் எதிரே உள்ள சாலையோர உணவகம் அருகில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் மெலிந்த நிலையில் மூக்கு மற்றும் இடது பக்க கண்ணருகில் பழைய சிராய்ப்பு காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தார். 

தகவல் அறிந்த அமர்வு நீதிமன்ற காவல் நிலைய காவலர்கள் சம்பவம் இடம் சென்று விசாரிக்கையில், மேற்படி நபர் வெளியூரை சேர்ந்தவர் என்றும் கடந்த சில ஆண்டுகளாக சற்குரு கோவில் முன்பு யாசகம் எடுத்தும் கோவிலில் வழங்கும் அன்னதானத்தை வாங்கி சாப்பிட்டும் ஜீவனம் நடத்தியுள்ளார். சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல் சரி வர சாப்பிடாமல் மயங்கி கீழே விழுந்ததாகவும் அப்போது அக்கம், பக்கத்தினர் அவருக்கு குடிநீர், தேநீர் வாங்கி கொடுத்து கோவில் ஓரமாக அமர வைத்ததாகவும் தெரிய வந்தது. நாளடைவில் உடல் நலமின்றி இறந்துள்ளார். பெயர்,விலாசம் தெரியாதவர் 5 அடி உயரமும், நரைத்த தாடி நரைத்த தலைமுடி, கண்கள் மூடிய நிலையில் காணப்பட்டார். சந்தன கலர் முழுக்கை சட்டை மற்றும் பச்சை சிவப்பு பார்டர் உள்ள மஞ்சள் கலர் வேஷ்டி இறந்த நபர் மீது இருந்தது. இறந்த நபர் உடற்கூராய்வு செய்யப்பட்ட நிலையில் உடலை யாரும் உரிமை கோர வில்லை. உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி கன்டோன்மென்ட் அமர்வு நீதிமன்ற தலைமை காவலர் குணசீலன் ஆதரவற்ற அனாதை பிணங்களை  நல்லடக்கம் செய்துவரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர், அண்ணா நகர், குழுமிக் கரை மயானத்தில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய தலைமை காவலர் குணசீலன் முன்னிலையில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதத்திற்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

Post a Comment

0 Comments