உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினை பாராட்டி 2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருதும் பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் அவரதுப் பணிக்கு உறுதுணையாக இருந்துவரும் அவரது இணையர் வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், மகள் கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோரை திருச்சிராப்பள்ளி திருவரங்கம் இராசவேலர் செண்பகத் தமிழ் அரங்கு அமைப்பின் இயக்குநர் இராச. இளங்கோவன், பொறியாளர் இராஜா ஆகியோர் பாராட்டினர். மேலும் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும் சமூக மேம்பாட்டிற்காக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் கலை, இலக்கியம், மற்றும் பாரம்பரியத்தைக் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், 26 முறை குருதி கொடை, மூன்று ஜோடி கண் தானத்தை பெற்றுக் கொடுத்த பணி, வாழ் நாளிற்குப் பிறகு படமாய் இருப்பதை விட பாடமாய் இருப்போம் என திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் மருத்துவ கல்லூரியில் உடல் தானத்திற்கு பதிவு செய்தமையையும், உடல்நலம், கவிதை, கட்டுரை நூல்கள் வெளியிட்டமையையும், தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் ஆளுமைகளை வலையொளியில் நேர்காணல் செய்யும் செயலையும் பாராட்டினர்.

0 Comments