உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தன்னலமற்றப் பணியினை பாராட்டி 2023ஆம் ஆண்டு திருச்சி மாவட்ட ஆட்சியர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஆளுநர் விருதும் பெற்ற அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாரை எச்ஐவி உடன் வாழ்வோர் கூட்டமைப்பு நிறுவனர் தமிழ் பாராட்டினார். மேலும் தமிழ் மொழி, பண்பாடு, கலாச்சாரம் மற்றும் கலைகளை பரப்பவும், பாதுகாக்கவும் சமூக மேம்பாட்டிற்காக அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் கலை, இலக்கியம், மற்றும் பாரம்பரியத்தைக்காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம் போன்றப்பணியினையும் பாராட்டினார்.

0 Comments