// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

விபத்தில் சிக்கிய பெண் சிகிச்சை பலனின்றி மரணம்! நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்!

திருச்சி, கரூர் சாலையில் முத்தரசநல்லூர் ரயில்வே கேட் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க வயதான பெண் ஒருவர் யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்தவர் முத்தரச நல்லூர் ரயில்வே கேட் அருகே சாலையை தெற்கில் இருந்து வடக்கு நோக்கி கடந்து சென்ற போது, அதே சாலையில் மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வந்த லாரி மோதியதில், பெயர், விலாசம் தெரியாத பெண்ணுக்கு நெற்றியில் இடது பக்க கண் புருவம் அருகே ரத்த காயம் ஏற்பட்டு இருந்தவரை உயிர் காக்கும் பொருட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்க்கப்பட்டார்.

உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். இறந்த பெண் சிகப்பு நிற மஞ்சள் பூ போட்ட சேலை, சிகப்பு ஜாக்கெட், மஞ்சள் கலர் பாவாடை, 5 சென்டிமீட்டர் வெள்ளை நிற தலைமுடி உடன் காணப்பட்டார். மாநிறம் கொண்டவர்.150 சென்டிமீட்டர் உயரம் கொண்டவர் ஆவார்.

இறந்த பெண் உடற்கூராய்வு செய்யப்பட்டது. உடற்கூராய்வு செய்யப்பட்ட பெண் உடலை யாரும் உரிமை கோரப்படாத நிலையில் ஜீயபுர காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார் நல்லடக்கம் செய்வதற்காக உரிமை கோரப்படாத ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில், திருச்சி அண்ணா நகர் குழுமிக்கரை மயானத்தில் ஜீயபுரம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜ்குமார், முதல் நிலை காவலர் பிரசாத் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பெண் உடலுக்கு இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

Post a Comment

0 Comments