// NEWS UPDATE *** தலைமைச் செயலாளர் முருகானந்தம் அதிரடி மாற்றம். புதிய தலைமை செயலாளராக சாய்குமார் நியமனம் ///////////////// உளவுப்பிரிவு டிஜிபி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம் மாற்றம் *** ஜிவிஎன் மருத்துவமனையில், உணவு விழுங்குவதில் ஏற்படும் சிரமங்களை போக்க டெக்லுடோலாஜி அறிமுகம்!

ஜிவிஎன் மருத்துவமனையில், உணவு விழுங்குவதில் ஏற்படும் சிரமங்களை போக்க டெக்லுடோலாஜி அறிமுகம்!

 திருச்சி ஜிவிஎன் மருத்துவமனையில், விழுங்குதலில் ஏற்படும் சிரமங்களை அறிவியல் பூர்வமாக கண்டறியவும், மற்ற சராசரி மனிதர்களை போல உணவு உட்கொள்வதற்காகவும், ஒரு விஞ்ஞான வளர்ச்சி Deglutology என்னும் மருத்துவ பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் அறிமுக விழா திருச்சி சாஸ்திரி ரோடு பகுதியில் உள்ள தனியார் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு ஜீவிஎன் மருத்துவமனை சேர்மன் டாக்டர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். இந்நிகழ்வில் காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை டாக்டர் ஜவகர் நாக சுந்தரம் பேசுகையில்,...

டெக்லுடோலாஜி மூலம் நரம்பியல் குறைபாடுகள், ஸ்ட்ரோக், வலிப்பு நோய்கள் (seizure disorders), தலை மற்றும் கழுத்து புற்றுநோய் சிகிச்சை, மற்றும் பிற மருத்துவ நிலைகள் காரணமாக விழுங்குவதில் சிரமம் அனுபவிக்கும் நோயாளிகளுக்கு முழுமையான சிகிச்சையை வழங்கலாம். இந்தத் துறையில் வழங்கப்படும் முக்கியமான கண்டறிதல் சேவைகளில் ஒன்றாக "Flexible Endoscopic Evaluation of Swallowing (FEES) குறிப்பிடப்படுகிறது. இது ஒரு மேம்பட்ட பரிசோதனை முறையாகும். இதில், இந்த வளைந்து கொடுக்கக்கூடிய எண்டோஸ்கோப் (flexible endoscope) பயன்படுத்தி விழுங்கும் செயல்முறையை நேரடியாகக் காண மருத்துவர்களால் முடியும்.விழுங்கிய பிறகு உணவு அல்லது திரவம் மீதம் இருப்பது, வாயிலிருந்து அல்லது மூக்கிலிருந்து வெளியேறுதல், தொண்டையில் உணவு சிக்கியுள்ள உணர்வு, விழுங்கும்போது வலி, உணவு எடுத்துக்கொண்ட பிறகு ஈரப்பதமான அல்லது கரகரப்பான குரல், சாப்பிடும் போது அல்லது குடிக்கும் போது இருமல், சுவாசமும் விழுங்குதலும் ஒருங்கிணைக்க சிரமம், மீண்டும் மீண்டும் ஏற்படும் aspintion நிமோனியா (உணவு துகள்கள் சுவாசக் குழாயில் செல்வதால் ஏற்படும் நுரையீரல் தொற்று), அல்லது உணவு பழக்கங்களில் மாற்றங்கள், இந்த அறிகுறிகள் உள்ள நோயாளிகளுக்கு FEES பரிந்துரைக்கப்படுகிறது. 


இந்த பரிசோதனை எளிதாக நோயாளி இருக்கும் இடத்திலேயே செய்ய முடியும், மேலும் குறுகிய இடைவெளிகளில் மீண்டும் மீண்டும் மேற்கொள்ள இயலும், இது ஒரு திறமையான மற்றும் குறைவான செலவில் செய்யக்கூடியது.விழுங்குதல் மறுவாழ்வு செயல்முறையில் பேச்சு மற்றும் மொழி Language Pathology) அணி முக்கியமான பங்காற்றுகிறது. இவர்கள் உள் நோயாளிகளுக்கு (Impatients) படுக்கையருகில் (bedside) முறையாக விழுங்குதல் சிகிச்சையையும், வெளி நோயாளிகளுக்கு (outpatient) சேவைகளாகவும் சிகிச்சையை வழங்குகின்றனர். 



இந்த சிகிச்சை, பாதுகாப்பான மற்றும் திறமையான விழுங்கும் திறனை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது. ஒவ்வொரு நோயாளியின் தேவைகள் மற்றும் அவர்களின் மருத்துவ விழுங்கும் திறனை பொறுத்து சிகிச்சை திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன. நோயாளி தினமும் உண்ணும் உணவுகளை வைத்து விழுங்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.


நோயின் தன்மையின் காரணமாக மூக்கின் வழியாக குழாய் மூலம் உணவு எடுத்துக்கொண்ட நோயாளிகளுக்கு கூட, குழாய் இல்லாமல் உணவு அருந்துவதுகற்கான சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், Flexible Endoscopic Evaluation of Swallowing (FEES) மற்றும் Modified Barium Swallow Study போன்ற பரிசோதனைகள் மூலம் சிக்கலான விழுங்குதல் கோளாறுகள் கண்டறியப்பட்டு, சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

வலிப்பு நோய்கள் oral phase டிஸ்பேஜியா, புற்றுநோய்க்கான கீமோ-(seizure disorders) கொண்டவர்களில் ரேடியேஷன் சிகிச்சை காலத்திலும் அதன் பின்பு ஏற்படும் oropharyngeal dysphagia, மற்றும் சுவாசக் குழாயில் செல்லும் ஏற்படும் (aspiration) பிரச்சினைகள் போன்றவைகளுக்கு வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளது. மேலும், சில நோயாளிகளில் சிகிச்சை தொடங்கிய 3 நாட்களுக்குள் கூட விழுங்குதல் சிரமங்கள் சரிசெய்யப்பட்டுள்ளன. இதனால், நோயாளிகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வாய்வழி உணவுகளை மீண்டும் தொடங்க முடிந்துள்ளது. ஆரம்பத்திலேயே சரியான கண்டறிதலும், தனிப்பயன் சிகிச்சையும் வழங்கப்பட்டதன் மூலம், நோயாளிகள் சிரமமின்றி உணவும் உணவுகளை எடுத்துக்கொள்ள முடிகிறது. அதேசமயம், aspiration மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு (malnutrition) போன்ற சிக்கல்கள் ஏற்படும் அபாயமும் குறைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments