// NEWS UPDATE *** பள்ளியில் ஆசிரியை வெட்டிக்கொலை சேலம், ஓமலூர் அருகே கமலாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்திற்குள் உள்ளே புகுந்து ஆசிரியை ஸ்ரீவித்யா வெட்டி படுகொலை குடும்ப பிரச்னை காரணமாக அவரது கணவர் விஜயமுருகனே வெட்டிக் கொலை செய்த‌தாக தகவல்; தப்பியோடிய அவரை போலீசார் தேடி வருகின்றன *** பசிப்பிணி போக்கி வரும் குடும்பத்தினர்!

பசிப்பிணி போக்கி வரும் குடும்பத்தினர்!

திருச்சி மாநகர் புத்தூர் பகுதியில் "பசிப்பிணி மருத்துவ இல்லம் உள்ளது. அதாவது படுக்கப்போட்டு மருந்து கொடுக்கும் மருந்தகம் அல்ல; உணவளிக்கும் உணவகம். பசிப்பிணிக்கு ஒற்றை மருந்து உணவுதான்"



திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், சட்டப்படிப்பு பயிலும் கீர்த்தனா விஜயகுமார் உள்ளிட்டோர் குடும்பம், 

உணவை வீணாக்காதீர் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதுடன் 

 உபரியாகும் உணவினை  மீட்டு   பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம் வழங்கி வருகிறார்கள். மேலும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம் ,பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம், உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலை உரிய மரியாதையுடன் நல்லடக்கம்  செய்து வருகிறார்கள்.

அன்னதானம் குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில், நெருப்பினுள் துஞ்சலும் ஆகும்’, ஒருவன் நெருப்புக்குள்கூடப் படுத்துத் தூங்கிவிட முடியும். ஆனால் வறுமை படுத்தும்பாட்டில் கண்மூடித் தூங்குதல் இயலாது (குறள் 1049). ‘ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி… அரிசி இன்மையின் ஆரிடை நீந்தி’ (புறம் 371) என்று சங்க காலத்தில் வயிற்றில் பசியுடன் நடந்தது போலவே இன்றும் நடக்கிறார்கள். பசி ஒரு பழைய நோய். உலக நோய். இன்றும் தொடர்கிறது. பசியைவிடக் கொடுமையான, பரவலான நோய் வேறெதுவும் இல்லை காலமும் களமும் தான் மாறியிருக்கிறது. எதார்த்தம் இன்னும் நெருப்பாய்ச் சுடுகிறது. புறநானூற்றின் 173ஆம் பாடலில் பசிப்பிணி மருத்துவன் இல்லம். படுக்கப்போட்டு மருந்து கொடுக்கும் மருந்தகம் அல்ல; உட்காரவைத்து உணவளிக்கும் உணவகம். பசிப்பிணிக்கு ஒற்றை மருந்து உணவுதான். பண்ணன் ஒரு சிறுகுடித் தலைவன். அதனால் என்ன, வேள்பாரி என்ன பெருவேந்தனா? கடையெழு வள்ளல்களில் யார் பேரரசன்? பசியுடன் வருவோர்க்கெல்லாம் தவறாமல் உணவளிப்பவன் பண்ணன். அதனால் அவன் வீடு பசிப்பிணி மருத்துவன் இல்லம். பசிப்பிணி மருத்துவம் என்பது வேறொன்றுமில்லை. பகிர்தல் அறம்; பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் திறம்.

 தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்' எனப் பாடினார் பாரதி. ஆனால் இந்தியாவில் தினமும் 30 கோடி மக்கள் இரவு உணவு இல்லாமல் தூங்குகிறார்கள். 18 கோடி மக்கள் காலை அல்லது மதிய உணவின்றி வாழ்கிறார்கள். உலகிலேயே அதிகப்படியான அளவாக இந்தியாவில் 19 கோடி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதோடு தினமும் ஆயிரக்கணக்கானோர் இப்பிரச்சனையால் பாதிக்கப்படுவதாகவும் ஐநாவின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனம் தெரிவிக்கிறது. உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் பொதுவானத் தேவை; 'உணவு'. பசி என்ற இயற்கை உணர்வுக்கு இயற்கையே உணவுப் பொருட்களையும் கொடுக்கிறது. ஆனால் அந்த உணவுப் பொருளை உற்பத்தி செய்வதில் தொடங்கி அவை ஒருவரது வயிற்றுக்குள் செல்வது வரையிலான பிரச்னைகள் நீண்டவை. உலகின் வேகமாக வளரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று.  மக்கள் தொகை பெருக்கமும், விளைநிலங்கள் எண்ணிக்கை குறைந்து வருவதும், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு போன்றவை மக்களின் உணவுத் தேவையையும், பசியையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றன. தங்கள் அதீத வசதியால் ஆடம்பர நட்சத்திர உணவகங்களில் அடிக்கடி உணவு சாப்பிடும் வர்க்கத்தினரும் நம் நாட்டில் இருக்கின்றனர். அதே வேளையில் ஒருநாளைக்கு ஒருவேளை உணவாவது கிடைக்காதா எனத் தவிப்போரும், கோவில் வாசலிலும் கடைத் தெருக்களிலும் யாசகம் கேட்பவர்களும் இருக்கிறார்கள். உலகம் முழுக்க அன்றாடம் பலர் பட்டினிச்சாவால் மரணிக்கிறார்கள். இயற்கை, இலவசமாகக் கொடுக்கும் உணவுப் பொருட்கள் ஒரு ஏழையின் பசியைப் போக்குவதற்குள் உயிர்வலியும் மரண வலிகளும் கண்முன் காட்டிச். சென்றுவிடுகின்றன. இதற்காக உணவகங்கள், திருமண மண்டபங்கள், நிறுவனங்கள் மற்றும் அதிகப்படியான உணவைக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்று உபரியாகும் உணவினை சேகரித்து பல ஆண்டுகளாக தினமும் உணவினை தேவைப்படும் மக்களுக்கு வழங்குகிறோம். திருச்சி பகுதியில் உபரியாக உள்ள உணவை வழங்க விரும்புவர்கள் 9842412247 எண்ணில் தொடர்பு கொண்டு உணவினை வழங்கலாம் அந்த உணவு தேவைப்படும் மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.


யோகா ஆசிரியர் விஜயகுமார் 

9842412247

Post a Comment

0 Comments