// NEWS UPDATE *** எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க ஜூலை 23 கடைசி நாள் - மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவிப்பு *** NEET UG 2026: அகில இந்திய தரவரிசையில் சாதனை படைத்த திருச்சி ஆகாஷ் மாணவர்கள்

NEET UG 2026: அகில இந்திய தரவரிசையில் சாதனை படைத்த திருச்சி ஆகாஷ் மாணவர்கள்

நாட்டின் முன்னணி தேர்வுப் பயிற்சி நிறுவனமான ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL), நீட் (NEET UG) 2026 தேர்வில் திருச்சியில் உள்ள தனது மாணவர்கள் நிகழ்த்தியுள்ள சிறப்பான சாதனையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இதில் திருச்சியைச் சேர்ந்த மாணவி யாழினி மணிவண்ணன், அகில இந்திய தரவரிசையில் (AIR) 777-வது இடத்தைப் பிடித்து திருச்சி நகர அளவில் முதலிடம் பெற்றுள்ளார். இவரைத் தொடர்ந்து, கௌதம் வெங்கடேஷ் அகில இந்திய தரவரிசையில் 1097-வது இடத்தையும், தக்ஷின் நாகராஜ் எஸ்.ஏ. 1678-வது இடத்தையும் பிடித்து சிறப்பான சாதனை படைத்துள்ளனர்.

இந்த ஆண்டு தேசிய அளவில் ஆகாஷ் மாணவர்கள் அபாரமான வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். குறிப்பாக, அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களுக்குள் 4 மாணவர்களும், முதல் 50 இடங்களுக்குள் 18 மாணவர்களும், முதல் 100 இடங்களுக்குள் 41 மாணவர்களும் இடம்பிடித்து, நீட் போன்ற கடினமான போட்டித் தேர்வுகளில் இந்தியாவின் மிகவும் நம்பகமான கல்வி நிறுவனமாக AESL மீண்டும் தனது முன்னணி இடத்தை உறுதிப்படுத்தியுள்ளது.


இந்த வெற்றி குறித்து ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் துணை மண்டல இயக்குநர் டி. சிவா பிரசாத் கூறுகையில், மாணவர்களின் இந்தச் சாதனை ஒட்டுமொத்த ஆகாஷ் குடும்பத்திற்கும் பெருமையான தருணம் என்றும், அவர்களின் ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் கற்றுக்கொள்ளும் ஆர்வம் ஆகியவை தேர்வுத் தயாரிப்பில் அவர்களை தனித்துவமாக வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் அவர்கள் சிறந்த மருத்துவர்களாக உருவெடுக்க தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

சாதனை படைத்த மாணவர்கள் கூறுகையில், தங்களது நீண்டநாள் கனவு நனவாகியுள்ளதாகவும், இதற்கு உறுதுணையாக இருந்த பெற்றோருக்கும், வழிகாட்டிய ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டனர். வழக்கமான மாதிரித் தேர்வுகள், விரிவான செயல்திறன் மதிப்பீடுகள் மற்றும் சந்தேகங்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் அமர்வுகள் ஆகியவை தங்களின் தயாரிப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாகத் தெரிவித்தனர். AESL நிறுவனம் தனது ஒருங்கிணைந்த கற்றல் அமைப்பு, அனுபவமிக்க ஆசிரியர்கள், செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த செயல்திறன் பகுப்பாய்வு மற்றும் தனிப்பட்ட வழிகாட்டுதல் மூலம், ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மாணவர்களை மருத்துவ நுழைவுத் தேர்வுகளுக்குத் தயார் செய்து வருகிறது.

Post a Comment

0 Comments