பன்னாட்டு லயன்ஸ் சங்கம் மாவட்டம் 3242F மண்டலம் ஒன்றின் திருச்சி சங்கங்கள் இணைந்து நடத்தும் ஐம்பெரும் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மணிகண்டம் இந்திரா கணேசன் சித்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி இந்திரா கணேசன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட், லயன்ஸ் கிளப் திருச்சிராப்பள்ளி ராயல், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி ராக் சிட்டி சைன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெட்ரோ பாலிட்டன், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை ராயல், லயன்ஸ் கிளப் ஆப் மாத்தூர், லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி மெஜஸ்டிக் உள்ளிட்ட சங்கங்கள் நிகழ்வினை இணைந்து நடத்தின. மண்டலம் ஒன்றின் தலைவர் முகமது ஷபி தலைமை வகித்தார். தாய்ப்பால் வார மாவட்ட தலைவர் சம்பத், மரக்கன்று நடுதல் மாவட்ட தலைவர் இளங்கோவன், சுற்றுச்சூழல் மாவட்ட தலைவர் தியாகராஜன், இலக்கு ஊக்குநர் மாவட்ட தலைவர் சரவணகுமார், மாவட்டத் தலைவர் பிரசன்ன வெங்கடேசன்,
லயன்ஸ் சங்க மாவட்ட மண் டல துணை பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட மண்டல துணை செயலாளர் ஜெயா பொண்ணு வேல், வட்டார தலைவர்கள் சரவணன், திலகவதி, சுப்பிர மணி, சந்தோஷ் சிவா, திலகவதி மோகன்ராஜ் பங்கேற்று சிறப்பித்தனர். லயன்ஸ் கிளப் ஆஃப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசன செயலர் விஜயகுமார், துணைத்தலைவர் சங்கர், மகேஸ்வரி, ஹரி பிரசாத், விக்னேஷ்,உஷா உட்பட பல்வேறு லயன்ஸ் சங்கங்களின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் முன்னிலையில் நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

0 Comments