// NEWS UPDATE *** “திமுகவின் நிலைப்பாடை தெரிந்துகொள்ளவே காங்கிரஸ் கட்சியின் அழுத்தத்தில் எம்.பி.க்கள் கூட்டத்தைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விஜய்” - அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் *** திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் சர்ச்சை; குற்றச்சாட்டுகளுக்கு விளையாட்டு அலுவலரின் கணவர் நல்லுசாமி அண்ணாவி மறுப்பு

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் சர்ச்சை; குற்றச்சாட்டுகளுக்கு விளையாட்டு அலுவலரின் கணவர் நல்லுசாமி அண்ணாவி மறுப்பு

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் அரசின் அனுமதி இல்லாமல் பயிற்சி அளிப்பது மற்றும் மிரட்டல் விடுத்தது தொடர்பான புகார்களுக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலர் ஞான சுகந்தியின் கணவரும், சர்வதேச தடகள வீரருமான டாக்டர் நல்லுசாமி அண்ணாவி செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில்:...அண்ணா விளையாட்டு அரங்கில் விளையாட்டு அகாடமி நடத்துவதற்கு அரசிடம் முறையாகப் பணம் செலுத்தப்பட்டுள்ளது. இதற்குரிய அனைத்து ஆதாரங்களும் எங்களிடம் உள்ளன. உறுப்பினர்களிடம் மட்டுமே கட்டணம் பெறப்படுகிறது. உண்மையான தடகள வீரர்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.கடந்த 33 ஆண்டுகளாக கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவும், அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்வதற்காகவும் எங்களின் சேவையைப் தொடர்ச்சியாக வழங்கி வருகிறோம். நிர்வாக விஷயங்களில் எனது மனைவி மாவட்ட விளையாட்டு அலுவலராக இருப்பதால், நான் அதில் எங்குமே தலையிடுவதில்லை.

மூத்தோர் தடகள சங்கம் என்பது பதிவு செய்யப்பட்ட அமைப்பு. இது திருச்சி மாவட்டத்தில் 450-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். சங்கம் எடுக்கும் முடிவுகளே இறுதியானது. தனிப்பட்ட முறையில் என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது.


விளையாட்டு அரங்கில் உள்ள கழிப்பறைகள் குறித்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கில் புகைப்படங்கள் எடுத்து அனுப்பப்படுகின்றன. விஐபி கழிப்பறை பயன்பாடு என்பது அங்குள்ள அதிகாரியின் அதிகாரத்திற்கு உட்பட்டது.


கடந்த ஆறு மாதங்களாக இது போன்ற ஆதாரமற்ற புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. சிலர் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். இது குறித்து உண்மைக்குப் புறம்பான புகார்கள் அளிக்கப்பட்டிருந்தாலும், தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்க்க உரிய விளக்கங்கள் அளிக்கப்பட்டுள்ளன.

விளையாட்டுத்துறைக்கும், விளையாட்டு வீரர்களின் நலனுக்கும் முரணான இதுபோன்ற அவதூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே தங்களின் வேண்டுகோள் என தெரிவித்தார்.



Post a Comment

1 Comments

  1. எங்கள் தரப்பு விளக்கத்தை தெளிவாக கொடுத்தமைக்கு நன்றி.

    ReplyDelete