திருச்சி மாநகராட்சி 58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் தீவிர பிரச்சாரம்
திருச்சி மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததை தொடர்ந்து வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக வேட்பாளராக போட்டியிடும் கவிதா செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். வார்டுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று கவிதா செல்வம் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் தனது வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக அச்சடித்து வீடுகள் தோறும் விநியோகம் செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார். இவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதுகுறித்து 58-வது வார்டு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் கூறுகையில்...
ஏற்கனவே கவிதா செல்வம் மூன்று முறை கவுன்சிலராக இருந்துள்ளார். அப்போது மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனுக்குடன் தீர்த்து வைத்தார். அவரது மக்கள் சேவை காரணமாக நான்காவது முறையாக இந்த முறையும் தேர்தலில் வெற்றி பெற்று மாமன்ற உறுப்பினர் ஆவது உறுதி ஆகிவிட்டது. கடந்த காலங்களில் இவர் செய்த மக்கள் பணியின் காரணமாக தற்போது மக்கள் ஆதரவு கவிதா செல்வதற்கு அதிகரித்துள்ளது என்றார்.
வாக்கு சேகரிக்கும் போது வட்ட கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.
0 Comments