NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்கள்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் கடிதம்


 இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கூடிய நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு காணவும் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ள 21 மீனவர்கள் மற்றும் 2 விசைப்படகுகளை  உடனடியாக விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்க தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு கடிதம்... 

நாகை மாவட்டத்திலிருந்து 31-01-2022 மீன்பிடி விசைப்படகில் நாகையிலிருந்து தென்கிழக்கே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டு இலங்கையில் உள்ள காங்கேசன்துறை கடற்படைத் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதேபோன்று காரைக்கால் புதுச்சேரி சேர்ந்த மற்றொரு மீன்பிடிப் படகில் மீன்பிடிக்க சென்ற 6 மீனவர்கள் மற்றும் புதுச்சேரி  மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர். என்று கடிதத்தில் தெரிவித்துள்ளார்

Post a Comment

0 Comments