ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு மத்திய அரசை கண்டித்து திருச்சியில் மனித நேய ஜனநாயக கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
ஹிஜாப் உரிமையை தடுக்காதே என்ற முழக்கத்துடன் மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் பேரணி மற்றும் கண்டண ஆர்ப்பாட்டம்!..
பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு!
ஹிஜாப் என்னும் தனி மனித உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் துரைசாமிபுரம் கிளையின் சார்பில் விழிப்புணர்வு அணிவகுப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர் சையது முஸ்தபா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சேக் மைதீன் முன்னிலை வகித்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பேரா. மைதீன், துரைசாமிபுரம் பங்குத்தந்தை ஆரோக்கிய பன்னீர்செல்வம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
மாவட்ட பொருளாளர் அந்தோணிராஜ், துணைச் செயலாளர்கள் அன்வர்தீன்,முகமது பீர்ஸா,மாவட்ட செயற்குழு உறுப்பினர் சையது முகமது மற்றும் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று கண்டனங்களை பதிவு செய்தனர்.
0 Comments