NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி பரப்புரை

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி பரப்புரை

 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டி  பரப்புரை


மக்கள் சக்தி இயக்கம் சார்பாக மாநில முழுவதும்  வாக்காளர்கள் 100% வாக்கு செலுத்த வலியுறுத்தி பரப்புரை நடந்தது.






திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக  பொதுமக்கள் கூடும் இடங்கள், வீடுகளில் வாக்களிப்போம் , வாக்களிப்போம், தவறாது வாக்களிப்போம். விழிப்புணர்வு   பிரசுங்களை முலம் பரப்புரை செய்யும் விதமாக   பொன்மலை, பொன்மலையடிவாரம் மக்கள் சக்தி இயக்க மாநில பொருளாளர் கே.சி. நீலமேகம் தலைமையில் நடந்தது.


வாக்காளர் விழிப்புணர்வு வாக்களிப்போம் சமூகக் கடமையாற்றுவோம் என்ற அடிப்படையில் மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை ஏற்படுத்தப்பட்டது.

எனது வாக்கு எனது உரிமை என் வாக்கு விற்பனைக்கு இல்லை உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களுடன் பொது மக்களிடை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


வாக்கு செலுத்தும் போது  நமது ஜனநாயக உரிமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டியது தலையான கடமை.


வாக்களிப்பது நம் அனைவரின் அடிப்படை ஜனநாயக கடமை மற்றும் உரிமை.  என  விழிப்புணர்வு பிரசுங்களை வழங்கினோம்.


மேலும் வாக்களிக்கும் கடமை ஆற்றுவோம்: பணத்துக்கு வாக்களிக்கும் மடைமை மாற்றுவோம் . என வாசகம் கொண்ட ஸ்டிக்கர்களை சைக்கிள், இரண்டு சக்கரம் வாகனம் மற்றும் கார் ஒட்டி பிரச்சாரம் செய்யப்பட்டது.


இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க பண்பாளர்கள் எஸ்.ஈஸ்வரன், லோகேஷ் , என்.தயானந்த், ஏசுதாஸ், வெங்கேடஷ், இளங்கோ, நரேஷ் மற்றும் பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.

Post a Comment

0 Comments