// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** இஸ்திரி போட்டு தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

இஸ்திரி போட்டு தென்னை மரம் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

 திருச்சி மாநகராட்சி தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 வது வார்டில் சுயேட்சை வேட்பாளராக பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில்  போட்டியிடுகிறார்.மேலும் தனது வாக்குறுதிகளை நோட்டீஸ் அச்சடித்து வீடுகள் தோறும் விநியோகம் செய்து தென்னைமரம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு வருகிறார். இவரது பிரச்சாரத்திற்கு மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. 

அந்த வகையில் நேற்று 12 வது  வார்டுக்குட்பட்ட பாலாஜி அவன்யூ, குடமுருட்டி ரோடு, பழைய கரூர் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களை சந்தித்து தென்னை மரம் சின்னத்திற்க்கு வாக்களிக்க வேண்டி தீவிர பிரச்சாரம் செய்தார். வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியில் உள்ள  சாலையோர இஸ்திரி கடையில் துணிகளை இஸ்திரி போட்டு வேட்பாளர் பாலமுருகன் வாக்கு சேகரித்தார். இது வார்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. 




இத்தகைய நூதன பிரச்சாரம் காரணமாக கடும் போட்டிகளை தாண்டி சுயேச்சை வேட்பாளர் பாலமுருகன் எளிதில் வெற்றி பெறுவார் என பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் வேட்பாளர் பாலமுருகனுக்கு ஆதரவாக அப்பகுதி மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தீவிரமாக பணியாற்றி வருவது பாலமுருகனுக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது 

Post a Comment

0 Comments