NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** 43 வது வார்டு வேட்பாளர் ஆதரித்து அமைச்சர்கள் பிரச்சாரம்

43 வது வார்டு வேட்பாளர் ஆதரித்து அமைச்சர்கள் பிரச்சாரம்

 திருச்சி 43 வது வார்டு திமுக வேட்பாளர் வழக்கறிஞர் செந்திலை ஆதரித்து அமைச்சர்கள் கே.என்.நேரு, மகேஷ் பொய்யாமொழி பிரச்சாரம்





பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் திருச்சி மாநகராட்சி 43 வது வார்டில் வழக்கறிஞர் செந்தில் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இதற்காக வேட்புமனு தாக்கல் செய்து தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் செந்தில். இந்நிலையில் இன்று 43 வது வார்டுக்குட்பட்ட ரயில் நகர் பஸ் நிறுத்தம் அருகே தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளர் செந்திலை ஆதரித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். இந்த கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.வேட்பாளர் செந்தில் பிரச்சாரம் செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் அமைச்சர்கள் இருவரும் சேர்ந்து மேற்கொண்ட இந்த தேர்தல் பிரச்சாரம் வேட்பாளர் வழக்கறிஞர் செந்திலின் வெற்றிக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments