// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** 43 வது வார்டு வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

43 வது வார்டு வேட்பாளர் உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

 பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ள  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் திருச்சி மாநகராட்சி 43வது வார்டில் திமுக சார்பில் வழக்கறிஞர் செந்தில்  உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்த உடன்

தனது பகுதிக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். 


அந்த வகையில் இன்று தனது 43 வது வார்டுக்குட்பட்ட குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று ஒவ்வொரு வாக்களரையும் தனிதனியா சந்தித்து  தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 






பல ஆண்டுகளாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வரும் இவருக்கு செல்லும் இடமெல்லாம் மக்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு வருகின்றது. பிரச்சாரத்தின் போது வேட்பாளர் செந்தில் மக்களிடம் பேசுகையில்...

இப்பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படும். பொதுமக்கள் எந்த நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளுக்காக மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் குரல் கொடுப்பேன். மேலும் பல்வேறான  திட்டங்களை அரசிடமிருந்து பெற்றுத் தர வாக்காளர்களை நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது வட்ட செயலாளர் முருகானந்தம், கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments