நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 12 வது வார்டில் சுயேச்சை வேட்பாளராக பாலமுருகன் தென்னை மரம் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் பாலமுருகன் ஈடுபட்டு வருகிறார். வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார்.
ஏற்கனவே பாலமுருகன் இந்த பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு தலைவர்களின் பிறந்த நாள் விழாக்களில் அன்னதானம் மற்றும் நலத்திட்டங்களை வழங்கி உள்ளார். இதனால் பாலமுருகனுக்கு வாக்களிக்க வார்டு மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆகையால் பாலமுருகனின் வெற்றி உறுதியாகி விட்ட ஒன்று என்று அப்பகுதியில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஒருவர் தெரிவித்தார். வாக்கு சேகரிப்பின் போது அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர்.
0 Comments