// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 13 வது வார்டு வேட்பாளர் குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

13 வது வார்டு வேட்பாளர் குக்கர் சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம்

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 13 வது வார்டில் அ.ம.மு.க சார்பில் குக்கர் சின்னத்தில் உமா மகேஸ்வரி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கல் செய்தவுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

வீடு வீடாக சென்று தேர்தல் வாக்குறுதிகளை துண்டு பிரசுரமாக வழங்கி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். மேலும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய மாநகராட்சியில் போராடுவேன் என்று வாக்குறுதி அளித்து பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் இன்று 13 வது வார்டு மலைக்கோட்டை




பகுதிகளில் உள்ள வெனிசு தெரு, ஆண்டாள் வீதி, சின்ன சவுக்கு ஆகிய பகுதிகளில்  வீடுகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கி குக்கர் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். 


Post a Comment

1 Comments