தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திருச்சி மாநகராட்சி தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் அங்கீகரிகப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசியல் கட்சியினர் முன்னிலையில் இன்று அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மொத்தம் 2450 தபால் ஓட்டு வந்துள்ளது. சமூக வலைதளங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி உண்டு. அதே நேரத்தில் தேர்தல் கட்டுப்பாடு விதிமுறைகள் மீற கூடாது..அதற்க்கான கட்டுப்பாடுகள் வைக்கப்பட்டுள்ளது, அதற்குள் விளம்பரம் செய்துகொள்ளலாம்.
இது குறித்து புகார் ஏதும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். தேர்தல் பிரச்சார கூட்டங்களில் உள் அறங்கில் 100 பேரும்,வெளியரங்கில் 1000 பேரும் கலந்துகொள்ளலாம். மொத்தம் வாக்கு பதிவு இயந்திரங்கள் 2444 பயன்படுத்தப்படுகிறது.
அரசியல் கட்சியினர் சுவர் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை என்று தெரிவித்தார்.
0 Comments