// NEWS UPDATE *** தவெக ஆட்சி அமைக்க தனது ஆதரவு கடிதத்தை வழங்கியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.. *** 58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு

58 வது வார்டு திமுக வேட்பாளர் கவிதா செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பு 

 திருச்சி மாநகராட்சி 58 வது வார்டில் திமுக சார்பில் வட்ட கழக செயலாளர் செல்வம் மனைவியான முன்னாள் கவுன்சிலர் கவிதா செல்வம் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். 



கடந்த ஆண்டுகளில் இவர் மூன்று முறை கவுன்சிலராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் முக்கிய நிர்வாகிகள் பொதுமக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்த வகையில் 58வது வார்டுக்குட்பட்ட அண்ணா நகர் பகுதிகளில் வீடு வீடாக சென்று உதய சூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்பகுதி மக்கள் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்து வருகின்றனர்.



வாக்கு சேகரிப்பின் போது வேட்பாளர் கவிதா செல்வம் பொதுமக்களிடம் கூறுகையில்...


விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை மற்றும் தார் சாலைகள் விரைவில் அமைத்து தரப்படும். பொதுமக்களின் அனைத்து பிரச்சனைகளும் உடனுக்குடன் விரைந்து சரி செய்யப் படும்.

2 நியாயவிலைக் கடைகளுக்கு புதிதாக கட்டிடம் அமைக்கப்படும், இது போன்ற எண்ணற்ற சேவைகளை அரசிடமிருந்து பெற்றுத் தர வாக்காளர்களாகிய நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments