// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சியில் பொதுமக்களுக்கு கரும்பு ஜூஸ் பிழிந்து வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

திருச்சியில் பொதுமக்களுக்கு கரும்பு ஜூஸ் பிழிந்து வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

பொதுமக்களுக்கு கரும்புச் சாறு பிழிந்து கொடுத்து பிரச்சாரம் செய்த 53 வது வார்டு அதிமுக வேட்பாளர் கற்பகவள்ளி





நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 53 வது வார்டு அதிமுக சார்பில் எம்ஜிஆர் இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா அவர்களின் மனைவி கற்பகவள்ளி போட்டியிடுகிறார்.


 இந்நிலையில் தொடர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த கற்பகவள்ளி இன்று 53வது வார்டுக்குட்பட்ட வில்லியம்ஸ் ரோடு, புது தெரு, முடுக்கு தெரு, சோனா மீனா சாலை ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அந்த பகுதியில் உள்ள கரும்புச்சாறு கடைக்கு சென்று அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கரும்பு சாறு பிழிந்து கொடுத்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். வாக்கு சேகரிப்பின் போது எம்.ஜி.ஆர். இளைஞர் அணி நகர செயலாளர் ஜி.ஆர்.சிவா, வட்ட செயலாளர் ஒத்தகடை மஹேந்திரன், எஸ்.எம்.டி.மணிகண்டன், தாரணி, நாகலட்சுமி, லஜபதி, ராஜகணபதி, யாசர் உள்பட நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments