// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 60 வது வார்டு பகுதியில் காஜாமலை விஜய் தீவிர பிரச்சாரம்

திருச்சி 60 வது வார்டு பகுதியில் காஜாமலை விஜய் தீவிர பிரச்சாரம்

 நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 60 வது வார்டில் திமுக சார்பில் காஜாமலை பகுதி செயலாளர் காஜாமலை விஜி போட்டியிடுகிறார். 


இதனையடுத்து தனது  60 வது வார்டுக்குட்பட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை கூட்டணிக் கட்சியினருடன் சேர்ந்து சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அந்தவகையில் நேற்று சுந்தர் நகர், கேகே நகர், காஜாமலை உள்ளிட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த வாக்கு சேகரிப்பின் போது கூட்டணி கட்சியினர் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.




Post a Comment

0 Comments