// NEWS UPDATE *** தனது வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதும் நடிகர் ரஜினிகாந்த்.. பல ஆண்டுகளாக பேசப்பட்ட இந்த முயற்சி இப்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.. மைசூரில் தங்கி புத்தகத்தை எழுதுவதில் கவனம் செலுத்தி வரும் ரஜினி, இந்த ஆண்டுக்குள் புத்தகத்தை வெளியிட திட்டம்.. *** திமுக 22 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

திமுக 22 வது வார்டு வேட்பாளர் தீவிர பிரச்சாரம்

 தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி பல்வேறு அரசியல் கட்சியினர் தங்களின்  வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வேட்புமனு தாக்கல் செய்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இந்நிலையில் திருச்சி மாநகராட்சி 22 வது வார்டில் திமுக சார்பில் உதய சூரியன் சின்னத்தில் தில்லை நகர் பகுதி செயலாளர் கண்ணன் மனைவி, விஜயலட்சுமி கண்ணன் அவர்கள் போட்டியிடுகிறார். இதையொட்டி தனது வார்டுக்குட்பட்ட  நிர்வாகிகள், பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று 22 வது வார்டுக்குட்பட்ட தில்லைநகர்  பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்றுஉதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


இந்த வாக்கு சேகரிப்பின் போது பகுதி செயலாளர் கண்ணன், வட்ட  செயலாளர்கள் இளையராஜா, வாமடம் சுரேஷ், வட்ட துணை செயலாளர் தில்லை ஆறுமுகம், அவைத்தலைவர் மருதநாயகம் மற்றும் பிரதிநிதிகள்  ரங்கநாதன், மகாலட்சுமி, சசிகலா, ரேவதி, சேகர், மாணிக்கம், சரவணன், தினேஷ், பாஸ்கர், ரங்கன் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.


Post a Comment

0 Comments