// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** 11 வது வார்டில் மாமியாருக்கு ஓட்டு கேட்ட மருமகள்கள்

11 வது வார்டில் மாமியாருக்கு ஓட்டு கேட்ட மருமகள்கள்

 திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிடும் விஜயா ஜெயராஜை ஆதரித்து அவரது மருமகள்கள் பிரச்சாரம் செய்தனர்


தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சி 11 வது வார்டில் திமுக சார்பில் விஜயா ஜெயராஜ் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்த விஜயா ஜெயராஜ் தனது வார்டுக்குட்பட்ட நிர்வாகிகள் மற்றும் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். இந்நிலையில் வேட்பாளர் விஜயா ஜெயராஜின் மருமகள்கள் யசோதா, பிரியா ஆகியோர் 11வது வார்டுக்குட்பட்ட உறையூர் கீரை கொல்லை பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று தனது மாமியார் விஜயா ஜெயராஜ் வெற்றிபெற உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.



Post a Comment

0 Comments