// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** மாநில அளவிலான செஸ் போட்டிகள் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

மாநில அளவிலான செஸ் போட்டிகள் 200க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்பு

திருச்சி  மாநில அளவிலான ஒருநாள் செஸ் போட்டிகள் டான் செஸ் அகடமி மற்றும்  SPR Promoters   சார்பில் டான்செட் அகடமியின் செயலர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டிகளை  சிவகங்கை மாவட்ட செஸ் அகடமி நிர்வாகிகள் கண்ணன் துவக்கி வைத்தார். 


இப்போட்டியில் சென்னை, திருச்சி, தஞ்சை, நாகப்பட்டினம், சிவகாசி, திருநெல்வேலி, சிவகங்கை உள்ளிட்ட 13க்கு மேற்பட்ட மாவட்டங்களை சேர்ந்த 221 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 7, 9, 13 15 ஆகிய வயதுடைய வீராங்கனைகளும் மற்றும் ஓபன் கேட்டகிரி போட்டிகள் நடைபெற்றது.

இப்போட்டிகள் Swiss முறையின் கீழ் நடைபெற்றது. ஒவ்வொரு போட்டிகளும் ஐந்து சுற்று நடைபெற்றது.  ஓபன் கேட்டகிரியில் வெற்றி பெற்ற வீரர் - வீராங்கனைகளுக்கு 

முதல் பரிசாக ரூபாய் 2000, இரண்டாவது பரிசாக ரூபாய் 1500, மூன்றாவது பரிசாக ரூபாய் ஆயிரமும் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல 7வயது முதல் 15 வயது வரை வெற்றி பெற்ற மற்ற வீரர் வீராங்கனைகளுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.


Post a Comment

0 Comments