// NEWS UPDATE *** ஈபிஎஸ் உடன் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் சந்திப்பு. அதிமுக - பாஜக இணைந்து கூட்டு பிரச்சாரத்தை முன்னெடுக்க திட்டம் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம் - ஈபிஎஸ்க்கு அழைப்பு சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை என தகவல் +++++++++++++++++++++++ பிகாரில் நவம்பர் 6, 11ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல். நவம்பர் 14 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை *** ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து சென்னையில் INTJ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஹிஜாப் விவகாரம் தொடர்பாக கர்நாடகா உயர்நீதிமன்றம் தீர்ப்பை கண்டித்து சென்னையில் INTJ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஹிஜாப் விவிவகாரத்தில்  அநீதி இழைத்த  கர்நாடகாவை கண்டித்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சென்னை மண்டலம் சார்பாக இன்று மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது... 

மத்திய சென்னை மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது. 




மாவட்ட செயலாளர் முஹம்மது சமீர் அவர்கள் தொகுத்து வழங்கினார். வட சென்னை, காஞ்சி, தென் சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

இதில் தலைவர் எஸ்.எம் பாக்கர் அவர்கள் கண்டன உரையாற்றினார்..."ஹிஜாப் விவகாரத்தில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் சொல்ல வேண்டியதை நீதிபதிகள் சொல்லி கொண்டு உள்ளனர் திருகுர்ஆன் வனங்களில் தெளிவாக  ஹிஜாப் குறித்து சொல்லப்பட்டுள்ளது.... பா.ஜ.க அரசு மிக பெரிய அளவில் முஸ்லிம்கள் மீது மறைமுக போர் தொடுத்து வருகின்றது,

 ஹிஜாப் ஆர்ப்பாட்டத்தில் பேசிய TNTJ நிர்வாகிகள் கைது ஏற்புடையது இல்லை, உணர்ச்சி பூர்வமான போராட்டத்தில் பேசுவதை கைது என்றால் இதற்கு முன்பு நீதிமன்றம் குறித்து பேசிய பாஜக ஆட்கள் மீது ஏன் கைது செய்ய வில்லை? 

ஹிஜாப் விசயத்தில் இந்திய அளவில் போரட்டம் நடைபெற்றது கொண்டு உள்ளது.இது ஓயாது எங்கள் உரிமைகளை பெறுவோம் என்றுபேசினார். 

உடன்  மாநில செயலாளர்கள் அபூ பைசல், ஜாகிர் உசேன்,சையது அலி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கண்டன உரையாற்றினார்கள்.

ISF மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முஸ்ஹப் இப்ராஹிம், பைசல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர். 

மத்திய சென்னை மாவட்ட துணை தலைவர் வஜகாத் அலி நன்றி உரையாற்றினார். 

துணைப் பொதுச் செயலாளர் முஹம்மது ஷிப்லி, பொருளாளர் பிர்தெளஸ், மாநில செயலாளர்கள் கலிமுல்லாஹ், முஹம்மது யூசுப்,மற்றும் மாநில மாவட்ட கிளை நிர்வாகிகள் ஆண்களும் பெண்களும் பெரும் அளவில் கலந்து கொண்டனர். 


Post a Comment

0 Comments