// NEWS UPDATE *** 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேமுதிக விருப்பமனு விநியோகம் இன்றுடன் நிறைவு பெற இருந்த நிலையில் 3 நாட்கள் அவகாசம் நீட்டிப்பு வரும் 15ம் தேதிக்குள் விருப்பமனுக்களை தேமுதிக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க அறிவுறுத்தல் *** ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆஜராக ஓ.பி.எஸ் , இளவரசிக்கு சம்மன்

ஆறுமுகசாமி ஆணையம் விசாரணைக்கு ஆஜராக ஓ.பி.எஸ் , இளவரசிக்கு சம்மன்

 மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான வழக்கில், விசாரணை நடத்த நீதியரசர் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ல் இடைக்கால தடை விதித்திருந்தது. அதையடுத்து தற்போது 3 ஆண்டுகளுக்குப் பிறகு ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இந்த வழக்கில் நேற்று விசாரணையை மீண்டும் தொடங்கியது. அதில் முதற்கட்டடமாக ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளித்த அப்போலோ மருத்துவர்களிடத்தில் நேற்று ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து இன்று இரண்டாவது நாளாக எய்ம்ஸ் மருத்துவர்களிடத்தில் விசாரணை நடைபெற்றது.




இந்த விசாரணையில், மருத்துவர் மதன்குமாரிடத்தில் விசாரணை ஆணையத்தினர் குறுக்கு விசாரணை நடத்தினர். பின்னர் இந்த விசாரணையில், 2016 டிசம்பர் 4-ல் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டது என்றும், மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடியாக சிகிச்சையளிக்கப்பட்டது எனவும் மதன் குமார் கூறியிருந்தார். மேலும் இந்த விசாரணையில் கலந்துகொள்ளாத மருத்துவர்கள் வரும் 15-ம் தேதி விசாரணைக்கு வரவேண்டும் என அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.


முக்கியமாக வரும் 21-ம் தேதி ஓபிஎஸ் விசாரணையில் ஆஜராக வேண்டுமென்று ஓபிஎஸ்-க்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும் சசிகலாவின் அண்ணண் மனைவி இளவரசிக்கும், வரும் 21-ம் தேதி ஆஜராக வேண்டும் என விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.

Post a Comment

0 Comments