NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்ட சப் இன்ஸ்பெக்டர் ஆயுதப்படைக்கு மாற்றம்

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மின்சாரம் தாக்கி இறந்த வாலிபரின் பிரேத பரிசோதனைக்கு பணம் கேட்டதால் துணை ஆய்வாளர்  ஆயுதப்படைக்கு மாற்றம் 




 திருச்சி மாவட்டம் துறையூர் பெரம்பலூர் ரோட்டில் மணவரை அமைக்கும் பணிக்கு திருவானைக்கோவில் அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த காந்தி மகன் சரத் (வயது 24)கடந்த 7ஆம் தேதி குழுவினரோடு சென்றார். அப்போது இரும்பு குழாய் தூக்கி  சென்றபோது உயர் அழுத்த மின் கம்பியில் மோதி மின்சாரம் பாய்ந்து தூக்கி எறியப்பட்டு உயிரிழந்தார்.



 இதுகுறித்து துறையூர் சப் இன்ஸ்பெக்டர்  சேகர் உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வந்தார்.

இந்த நிலையில் சரத் உறவினர்களிடம் பிரேத பரிசோதனை முடித்து தர சப் இன்ஸ்பெக்டர் சேகர் பணம் கேட்டதாக கூறப்படுகிறது.  5 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு இன்னும் கூடுதலாக சப் இன்ஸ்பெக்டர்  பணம் கேட்டுள்ளார் .கேட்ட பணம் வராத நிலையில் பிரேத பரிசோதனைக்காக காவல் துறை ஆவணங்களில் சமர்ப்பிப்பதில் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. உறவினர் மூலம் இது பற்றிய விவரங்கள் உயரதிகாரிகள் தெரியவர நேற்று சப்-இன்ஸ்பெக்டரை உடனடியாக ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் திருச்சி மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Post a Comment

0 Comments