NEWS UPDATE *** விலை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு விவசாயிகளுக்கு கர்நாடகாவில் அறிவித்தது போன்று இழப்பீடு தர வேண்டும் - மத்திய, மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் *** உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பாதுகாப்பு, உடலுறுப்பு தானம் வலியுறுத்தி ஃப்ரண்ட் லைன் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பாதுகாப்பு, உடலுறுப்பு தானம் வலியுறுத்தி ஃப்ரண்ட் லைன் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி

உலக சிறுநீரக தினத்தையொட்டி சிறுநீரக பாதுகாப்பு, உடலுறுப்பு தானம் வலியுறுத்தி  விழிப்புணர்வு பேரணி  திருச்சியில் நடைபெற்றது 

நீரிழிவு, உயர் ரத்த அழுத்தத்தினால்  சிறுநீரகம் செயல் இழப்பதுடன், உடலில் நீர் வறட்சி ஏற்படுவதும், வலிநிவாரணி மாத்திரைகளை அதிகளவில் உட்கொள்வதும் சிறுநீரக பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது.




எனவே சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டும் என்பதனை அடிப்படையாகக் கொண்டு மார்ச் மாதம் இரண்டாவது வியாழக்கிழமை சர்வதேச சிறுநீரக தினமாக கடைபிடிக்கப்படுகிறது


அதன்படி மார்ச் 10ம் தேதியான இன்று உலகம் முழுவதும் சிறுநீரக தினம் கடைபிடிக்கப்படும்பட்சத்தில் திருச்சியிலுள்ள ஃப்ரண்ட லைன் தனியார் மருத்துவமனை சார்பில் சிறுநீரக பாதுகாப்பு மற்றும் உடல் உறுப்பு தானத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

மருத்துவர்கள், செவிலியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் அண்ணா சிலையில் இருந்து பேரணியாக புறப்பட்டு, சத்திரம் பேருந்து நிலையம், தெப்பக்குளம் வழியாக சென்று மீண்டும் அண்ணாசிலையை வந்தடைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Post a Comment

0 Comments