திருச்சி மாநகரில் வட மாநிலத்தவர்கள் வசிக்கும் பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது...
இந்தியாவில் வட மாநிலங்களில் குளிர்காலம் முடிந்து கோடை காலத்தை வரவேற்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் ஹோலி பண்டிகை கொண்டாடுவது வழக்கம்...
திருச்சியில் வட மாநிலத்தவர்கள் அதிகமாக வசிக்க கூடிய பகுதியான நடு குஜிலி தெரு, பெரிய கம்மாளத்தெரு, ஜாபர்ஷா தெரு ,சின்ன செட்டி தெரு, செளராஷ்டார தெரு ஆகிய பகுதிகளில் ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறுவர், சிறுமிகள் , பெண்கள், ஆண்கள் ஒருவர் மீது மற்றொருவர் வண்ணப் பொடிகளை தூவி உடலில் பூசியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்..
0 Comments