திருச்சி துவாக்குடி செடிமலை முருகன் கோவில் தெருவில் பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றி புதிய மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு செடிமலை முருகன் கோவில் தெருவில் 20 வருடங்களாக மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளதாகவும் இதனை மாற்றி அமைத்து தரும்படி அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், 9வது வார்டு கவுன்சிலர் சாருமதி முயற்சியில் பழுதடைந்த மின் கம்பத்தை மாற்றி புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. துரிதமாக செயல்பட்ட மின்வாரிய அதிகாரி களுக்கும், முயற்சி எடுத்த வார்டு கவுன்சிலர் சாருமதிக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
0 Comments