இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் நெருங்கிவிட்டது.இதனால் இன்னும் சில நாட்களில் ஒவ்வொருவரும் நோன்பு கடைபிடிக்க தொடங்கிவிடுவார்கள். அவர்களுக்கு தற்போது இதமான அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு கூறியுள்ளது.
அதன்படி 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி பள்ளிவாசல்களுக்கு வழங்க தமிழக அரசு அறிவித்துள்ளது. நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களில் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.ரூபாய் 13.50 கோடி கூடுதல் செலவினம் மூலம் பள்ளிவாசல்களுக்கு 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்படும் என்று தமிழக அரசு கூறியது. இதனால் இஸ்லாமியர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 6 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments