திருச்சி பொன்மலையில் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் விதமாக சுமார் 1000 மூங்கில் மரக்கன்றுகள் வைக்கப்பட்டு ஆக்சிஜன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை வளாகத்தில் ரயில்வே பணிமனை பணியாளர்கள் குடியிருப்புகள்,பள்ளிகள், விளையாட்டு மைதானங்கள், வாரச்சந்தை, பொழுதுபோக்கு மையம், திருமண மண்டபம், உள்ளன.
ஆங்கிலேயர்கள் உருவாக்கப்பட்ட இந்த கட்டமைப்பு காலப்போக்கில் பராமரிப்பின்றி சேதமடைந்தது. கட்டிடங்கள் சேதம் அடைந்ததால் குடியிருப்புகளில் வாழ்ந்த பெரும்பாலான பணியாளர்கள் குடும்பத்துடன் அங்கிருந்து வெளியேறி விட்டனர். இதனால் பொன்மலை பகுதி முழுவதும் முள் செடிகள் வளர்ந்து பொலிவிழந்து காணப்பட்டது .
தற்போது பொன்மலை ஜி கார்னர் முதல் ரயில்வே பணிமனை வரை செல்லக்கூடிய சாலையில் மூங்கில் மரங்களான ஆக்சிஜன் பூங்கா அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. இதற்காக அங்கிருந்து முள்செடி புதர்கள் அகற்றப்பட்டு ரவுண்டானா முழுவதும் சிரமைக்கப்பட்டுள்ளது. சுற்றிலும் இரும்பு கம்பிகளை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றுப்புற பகுதியில் உள்ள கரியமில வாயுவை உறிஞ்சும் அதிக அளவில் ஆக்சிஜன் வெளியேற்றி சுற்றுச்சூழலை மேம்படுத்த மூங்கில் உதவும் என்பதால் இந்த பகுதியில் அதிக அளவில் மூங்கில்களே நடவு செய்ய பணிமனை தலைமை மேலாளர் முடிவு செய்துள்ளனர். அதன்படி தற்போது 1,000 மூங்கில்கள் நடப்பட்டு வருகிறது
0 Comments