NEWS UPDATE *** பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு தடை விதித்தது இந்திய அரசு! *** அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனியார் டிவி நிகழ்ச்சியில் முதல்வர் வேடமிட்டு நடித்த சிறுமி வெளியேற்றம்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தனியார் டிவி நிகழ்ச்சியில் முதல்வர் வேடமிட்டு நடித்த சிறுமி வெளியேற்றம்


தமிழக முதலமைச்சர் வேடத்தில் நடித்ததால் தனியார் தொலைக்காட்சியின்  நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிறுமி - குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சியில் கூட அரசியல் காழ்ப்புணர்ச்சியா ? திருச்சியில் குழந்தையின் தந்தை ஆதங்கம் ...


திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆருத்திரா என்பவரின் மக்ள் சமிஷ்கா தேவி - இவர் சிறு வயது முதற்கொண்டே சிம்பு, விஜய்,ரஜினி போன்ற பல நடிகர் வேடத்தில் நடித்து அசத்தி வருகிறார்.




இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் குழந்தைகள் பங்கு பெறும் நிகழ்ச்சியில் சேர்ந்து கடந்த சில மாதங்களாக தனது திறமையை வெளிப்படுத்தி வரும் சமிஷ்கா தேவி கடந்த மாதம் தமிழக முதல்வர் 

மு.க ஸ்டாலின் வேடத்தில் நடித்து அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றார்.


மேலும் தமிழக முதல்வர் 

மு.க ஸ்டாலின் சமிஷ்கா தேவியை நேரில் அழைத்து பாராட்டினார் - முதல்வர் வேடத்தில் நடித்ததில் இருந்தே சமிஷ்கா தேவி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது பல பிரச்சனைகளை தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தயாரிப்பு குழு கொடுத்து வந்துள்ளது.


இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இருந்து சமிஷ்கா தேவி வெளியேற்றப்பட்டுள்ளார் - குழந்தைகள் தங்களது திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் தான் இது போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு அழைத்து செல்கிறோம் ஆனால் அங்கும் அரசியல் கால் புணர்ச்சி நடைபெறுகிறது என்று எண்ணும்போது வருத்தமாக இருப்பதாக குழந்தையின் தந்தை ஆருத்திரா திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

Post a Comment

0 Comments