BREAKING NEWS *** ஈரான் அதிபர் மரணம் - பிரதமர் இரங்கல் *** திருச்சி விமானநிலைய ஓடுதளம் அருகே செல்போன் டவர்....! எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி விமானநிலைய ஓடுதளம் அருகே செல்போன் டவர்....! எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி விமானநிலையம் ஓடுதளம் செல்போன் டவர் அமைய உள்ளது...செல்போன் டவர் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் புகார் மனு அளித்தார் 

திருச்சி கே.கே நகர்  அருகே ஜே.கே நகர் பகுதியில் உள்ள ராஜகணபதி நகரில் தனியார்  மார்க்கெட்டிங் நிறுவனத்தின் உரிமையாளர் முத்து என்கிற மாரிமுத்து அவருக்கு சொந்தமான கட்டிடத்தில் மேல்தளத்தில் சுமார் 63 அடி உயரத்திற்கு செல்போன் டவர் அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

 இப்பகுதி திருச்சி பன்னாட்டு விமான நிலையம் ஓடுதளம் மிக அருகில் அமர்ந்துள்ள இடம் ஆகும். எனவே, விமானங்கள் தரையிறங்கும் நேரத்தில் விபத்தை ஏற்படுத்தும் சூழல் ஏற்படும்.

திருச்சி மாநகராட்சியில் விதியின்படி 28அடிக்கு மேல் கட்டடம் கட்ட மக்களுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்ட நிலையில் சுமார் தரையில் இருந்து 60 அடி உயரத்திற்கு மேல் செல்போன் டவர் அமைக்க அனுமதி கொடுத்தது தவறு. 

விமானம் தரையிறங்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டால் அப்பகுதியில் குடியிருக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவே இதனை கருத்தில் கொண்டு உயர் சேதம் ஏற்படுத்தும் முன்பு நடவடிக்கை எடுத்து செல்போன் டவர் அமைப்பதே நிரந்தரமாக தடைசெய்ய வேண்டுமென அம்மனுவில் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

1 Comments

  1. மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,அலட்சியம் வேண்டாம் உயிர் சம்பந்தபட்டவை...

    ReplyDelete