// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** 1025 ஆண்டு பழமை வாய்ந்த நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழா

1025 ஆண்டு பழமை வாய்ந்த நத்தர்ஷா தர்கா சந்தனக்கூடு விழா

திருச்சியில் 1025ஆண்டுகள் பழமைவாய்ந்த நத்தர்ஷா தர்கா  சந்தனக்கூடு விழா – பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு...

திருச்சி  பழைய மதுரை ரோடு பகுதியில் அமைந்துள்ள  நத்ஹர்வலி தர்கா 1025வருடம் பழமையும், பெருமையும் வாய்ந்தது. இந்த பழமைவாய்ந்த தர்ஹாவிற்கு தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதுமிருந்து ஏராளமானோர் வந்து செல்வார்கள்...

இங்கு ஆண்டுதோறும் சந்தனக்கூடு  வெகுவிமரிசையாக நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனக்கூடு ஊர்வலம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. ஊர்வலமானது காந்தி சந்தை கமான்  வளைவு வழியாக  புறப்பட்டு பெரிய கடைவீதி,சின்ன கடை வீதி , NSB  ரோடு வழியாக வலம்வந்து மீண்டும் தர்ஹாவை அதிகாலை வந்தடைந்தது...

முன்னதாக ஹஜ்ரத் தபலே ஆலம் பாதுஷா அவர்களின் நினைவிடத்தில் மதநல்லிணக்கத்தை வலியுறுத்தும்விதமாக தர்கா நிர்வாகிகள், இந்து, கிறிஸ்தவ பொதுமக்கள் மற்றும் இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மக்கள் பலரும் வருகைதந்து மலர்போர்வை அணிவித்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்....

இதில் தமிழகம், கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பிறமாநிலங்களிலிருந்தும் இஸ்லாமிய சமூகத்தினர் மட்டுமன்றி பல்வேறு மதத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு வழிபாடு செய்தனர். பொதுமக்களின் பாதுகாப்பையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டும், மாநகர காவல்துறை சார்பில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Post a Comment

0 Comments