// NEWS UPDATE *** கத்தார் எரிவாயு ஆலை தீ விபத்தில் நெல்லை, ராதாபுரம் பகுதியை சேர்ந்த 3 இளைஞர்கள் பலி இரங்கல் தெரிவித்துள்ள CM விஜய், இளைஞர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்தார். உடல்களை விரைவில் தமிழகம் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி *** திருச்சி 28 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய், மின் கம்பம் அமைக்க மேயரிடம் கவுன்சிலர் மனு

திருச்சி 28 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய், மின் கம்பம் அமைக்க மேயரிடம் கவுன்சிலர் மனு

 திருச்சி மாநகராட்சி  28 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய், மின் கம்பம் அமைக்க  திருச்சி மேயரிடம் கவுன்சிலர் பைஸ் அகமது மனு அளித்தார்...திருச்சி மாநகராட்சி 28 வது வார்டு பகுதியில் பைஸ் அகமது கவுன்சிலராக உள்ளார்...

28 வது வார்டுக்குட்பட்ட இனாம்தார்தோப்பு , அண்ணா நகர்,  குத்பிஷாநகர், பாரதி நகர்,  சத்யா நகர், மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் அனைத்து தரப்பு மக்களும் வாழக்கூடிய பகுதியாக உள்ளது...

இந்த பகுதியில் முக்கிய இடங்களில் குடிநீர் குழாய்கள் அமைக்கவும், இரவு நேரங்களில் மக்கள் அச்சமின்றி நடமாட  புதிய மின் கம்பங்கள் அமைக்கவும் 28 வது வார்டு மனிதநேய மக்கள் கட்சி  கவுன்சிலர் பைஸ் அகமது திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்....மனுவை பெற்று கொண்ட மேயர் அன்பழகன் மாநகராட்சி அதிகாரிகளிடம் ஆலோசனை செய்து விரைவில் பணியை தொடங்கப்படும் என உறுதியளித்தார்....

Post a Comment

0 Comments