// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 818 செவிலியர்கள் பணிநீக்கம்! - SDPI கட்சி கண்டனம்

நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி 818 செவிலியர்கள் பணிநீக்கம்! - SDPI கட்சி கண்டனம்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் முன்களப் பணியாளர்களாக போற்றப்பட்டவர்களை  நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி  அரசே போய் வாருங்கள் என தூக்கி வீசுவது ஏற்புடையதல்ல!

இதுதொடர்பாக SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்று முதல் அலை மற்றும் இரண்டாம் அலையின் போது, பொது மருத்துவ பணியாளர் தேர்வாணைய (எம்.ஆர்.பி) தேர்வு எழுதி, தகுதியின் அடிப்படையில் பணியில் சேர்ந்த செவிலியர்களில், 818 செவிலியர்களை நிதிப் பற்றாக்குறையைக் காரணம் காட்டி தமிழ்நாடு அரசு பணிநீக்கம் செய்துள்ளது கண்டிக்கத்தக்கது.

இந்நிலையில் தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், பணிநிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை கைது செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்ட செவிலியர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்

Post a Comment

0 Comments