// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** பணி நீட்டிப்பு செய்ய கோரி செவிலியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

பணி நீட்டிப்பு செய்ய கோரி செவிலியர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

 திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களின் ஒப்பந்த காலம் நிறைவடைந்ததையொட்டி பணி நீட்டிப்பு செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  செவிலியர்கள் மனு அளித்தனர்

கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு  மருத்துவமனையில் 60 க்கு மேற்பட்ட செவிலியர்  ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்டனர்

இவர்களுக்கு மாதம் 14 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டது. ஒப்பந்த காலம் நேற்று நிறைவடைந்த நிலையில் பணி நீட்டிப்பு செய்ய கோரி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  ஒப்பந்த செவிலியர்கள்  மனு அளித்தனர்

பின்பு செய்தியாளர்களிடம் கூறும்போது: "கொரோனா தொற்று உட்சத்தில் இருந்த காலத்தில் உயிரை பணயம் வைத்து வேலை பார்த்து கொரோனாவை கட்டுபடுத்தி உள்ளோம் 

சம்பளம் வழங்காத நிலையிலும் 3 மாதம் பணிபுரிந்தோம் எங்களை அரசு கைவிட கூடாது எங்களது பணியினை நீட்டிப்பு செய்ய வேண்டும்...மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் எங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் " என கூறினர்



Post a Comment

0 Comments