// NEWS UPDATE *** காவிரி பாசன மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்; மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ***************** தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு திருத்தம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் *** திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள துணை தலைவர் பதவியை தேர்வு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மனு

திருச்சி வேங்கூர் ஊராட்சி மன்றத்தில் காலியாக உள்ள துணை தலைவர் பதவியை தேர்வு செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு உறுப்பினர்கள் மனு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சியை சார்ந்த வார்டு உறுப்பினர்கள் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்....

அந்த மனுவில்:

திருச்சி  திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேங்கூர் ஊராட்சியில் மொத்தம் 6 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் வேங்கூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் 6-வது வார்டு உறுப்பினர்  மணிகண்டன் என்பவர் கடந்த 06.01.2022ம் தேதி ராஜினமா செய்துவிட்டார்....

துணைத்தலைவர் பதவி வெற்றிடமாக உள்ளது. இன்று வரை துணைத்தலைவர் கிடையாது. அன்றுமுதல் இன்று வரை ஊராட்சி கூட்டம் நடைபெறுவதே இல்லை. இதனால் மக்கள் நல பணிகளும் நிலுவையில் உள்ளது. இதுகுறித்து வட்டாட்சியர், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி உதவி இயக்குநர் ஆகியோரிடம் புகார் கொடுத்தும் இன்று வரை நடவடிக்கையும் இல்லை.

எனவே மாவட்ட ஆட்சியர் அதற்கு நேரில் ஆய்வு செய்து துணைத்தலைவர் பதவி தேர்வு செய்ய வேண்டும்" என கோரிக்கை வைத்தனர்....

Post a Comment

0 Comments