திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள MIET கல்வி நிறுவனங்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்கள் இணைந்து நடத்திய, தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற இத்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் K.M காதர் மொய்தீன், அவர்களுக்கு பாராட்டு விழா MIET கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
MIET கல்வி நிறுவன தலைவர், Er A. முகமது யூனுஸ், அவர்கள் விழாத்தலைமையேற்று, சிறப்பு விருத்தினருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசினை வழங்கி கௌரவித்தார். மேலும் இஸ்லாமியா சமுதாயத்திற் கிடைத்த ஒரு வரப்பரசதம் என்று புகழ்ந்தார்.
தமிழக அரசின் தகைசால் தமிழர் விருது பெற்ற பேராசிரியர் K.M காதர் மொய்தீன், தனது ஏற்புரையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பாக தமிழக முதல்வருக்கும் தமிழக அரசுக்கும் முதலில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார். இவ்விருது எனக்கு வழங்கியதாக ஒரு போதும் எண்ணியதில்லை தமிழுக்கும் தமிழ்தழுவிய இஸ்லாமிய மதத்திற்கும். தமிழ் மக்களுக்கும், தமிழ் பண்பாட்டியிற்கும், சுமுகமான உறவின் வாழ்விற்கான சேவைக்கு கிடைத்த விருது இது இவற்றை எனக்கு கொடுத்ததாக நினைக்கவில்லை. இங்கு என்னை பாராட்டி பேசிய வார்த்தைகளை மேலும் நான் உழைக்க ஒரு தூண்டுகோலாக எடுத்துக்கொள்கிறேன். மக்களை எளிமையாக ஈர்க்கக் கூடிய மார்க்கம் இஸ்லாமிய மார்க்கம். திருக்குரான் வசனங்களில் 4296 வசனங்களும், ஆண்டவரை பற்றி மட்டுமே சொல்லப் பட்டுள்ளது. உலகில் எந்த வேதங்களிலும் இவை இல்லை, நாம் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல எல்லா மார்க்கத்தையும் இஸ்லாம் ஏற்றுக் கொண்டுள்ளது. வேறு மதங்களில் வேறுபாடுகளும் முரண்பாடுகளும் உண்டு. இவற்றை தள்ளி வைத்து விட்டு உடன்பாட்டோடு இருக்க வேண்டும். இஸ்லாம் மதத்தில் எந்த சாதி மதக்கூட்டமோ நமக்கு விரோதிகள் இல்லை உண்மையான விரோதிகள் சைதான் என்றார். இஸ்லாமிய மார்க்க வழியில் தொடர்ந்து பின்பற்ற வெண்டும்
வாழ்த்துரை வழங்கிய இஸ்லாமிய சான்றோர்கள் அவர் ஆற்றிய தொண்டினையும் மக்களுக்காக செய்த செயல்களையும் புகழ்ந்துபேசினார்கள். மேலும் இஸ்லாமியர்களுக்கு கிடைத்த மாமனிதர் என்று புகழாரம் சூட்டினர்
இவ்விழாவில் இதில் 1000 க்கும் மேற்பட்ட, திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள இஸ்லாமிய சான்றோர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
MIET பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் A. நவீன் சேட் அவர்கள் நன்றியுரையுடன் விழா நிறைவுற்றது.





0 Comments