கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு விஷ்வ இந்து பரிஷத் சார்பாக திருவெறும்பூர் ஒன்றியதுக்குட்பட்ட திருச்சி தெற்கு காட்டூர் பகுதியில் வேல் பூஜை நடத்தபட்டது.
இந்த வேல் பூஜை விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட இணை செயலாளர் அழகு யுவராஜ் தலைமையிலும் ஆர்.விஜயராமன் திருவெறும்பூர் விஷ்வ இந்து பரிஷத் பிரகண்ட தலைவர் விஷ்வ இந்து பரிஷத் திருவெறும்பூர் பிரகண்ட செயலாளர் பிரபாகரன் திருச்சி திருவெறும்பூர் விஷ்வ இந்து பரிஷத் பிரகண்ட துணை தலைவர் தினேஷ் ஆண்டனி ஆகியோர்கள் முன்னிலையிலும் வேல் பூஜை நடத்தபட்டது இந்த நிகழ்வுக்கு பாஜக மூத்த நிர்வாகியும் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி. இந்திரன் மாவட்ட விவசாய அணி பொது செயலாளர் ஆகியோர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வேல் பூஜையில் கலந்து கொண்டனர் இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு வேலுக்கு அபிசேகம் செய்து வழிபட்டனர் மற்றும் விஷ்வ இந்து பரிஷத் நிர்வாகிகள் சிவா ராஜா பாலசந்தர் கலந்து கொண்டு வேல் பூஜை செய்தனர் வருகின்ற 27.10.25 மாலை வேலுக்கு பூஜை செய்து தெற்கு காட்டூர் பகுதியில் ஊர்வலம் நடைபெறும் ஊர்வலம் நடை பெற்ற பின்பு சூரசம்காரம் நிகழ்வு நடை பெறும் இந்த நிகழ்வுக்கு விஷ்வ இந்து பரிஷத் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்

0 Comments